“இணைய சமூகம்” (இன்ரநெட் சொஷைட்டி) ஊடாக இணையத்தினை பூகோள தொழில்நுட்ப கட்டமைப்பாகவும், மக்களின் வாழ்க்கையை செழிப்பூட்டுவதற்கான வளமாகவும் மற்றும் சமூகத்தில் நல்லதொரு சக்தியாகவும் மாற்றுவதற்கான மேம்படுத்தல்களையும் உதவிகளையும் செய்து அபிவிருத்தி செய்தல்
இணையத்தை பாதுகாப்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், திறந்ததாகவும், மற்றும் பூகோளரீதியல் இணைக்கப்பட்டதாகவும் மாற்றுவதற்கான எமது இலக்குகளுடன் எமது செயற்பாடுகள் இயைந்துள்ளது.
இவ் இலக்குகளை அடைந்து கொள்வதில் பங்களிக்கும் அனைவருடனும் கைகோர்ப்பதற்கு எதிர்பார்க்கிறோம்.
இணையத் தொழிலில் ஈடுபடும் சமூகத்தினரை கட்டியெழுப்புதலும் ஆதரவளித்தலும்;
இணைய கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் திறந்த வரையறைகள் என்பவற்றினை பயண்படுத்தவும் அபிவிருத்தி செய்வதற்குமான முன்னுரிமைப்படுத்தல் ;
இணையம் தொடர்பான எமது பார்வையுடன் இயைந்து செல்லக்கூடிய கொள்கைகளுக்கான பரிந்துரைகளைச் செய்தல்